டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைனியே எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. அரசு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளும் உங்கள் மொபைலுக்கு வந்தா எப்படி இருக்கும்?  தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதற்கு பெயர் விரு தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவை. பொது மக்களுக்கு தேவையான தகவல்களை இதன் மூலம் உடனுக்குடன் பெறலாம். விருதுநகர் புத்தக திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் இதனை தொடங்கி வைத்தார். இந்நிலையில் வாட்ஸ்அப் சேவையை எப்படி பெறலாம் என்பது பற்றி காண்போம்.


விரு தகவல் தொடர்பு சேவை :


விரு தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவையின் வாட்ஸ் அப் எண்: 9488400438


இந்த எண்ணை மொபைலில் சேவ் செய்து ’ஹாய்’ என செய்தி அனுப்பினால் போதும். அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு அளித்து வரும் சேவைகளுக்கான லிங்குகளை நேரடியாக மொபைலில் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது, வாக்காளர் பட்டியில் உள்ள பெயரினை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்ய, இட மாற்றம், திருத்தம் செய்ய, மின்னணு வாக்களார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய, பட்டா, சிட்டா பதிவேடு மற்றும் இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு 


முதல் முயற்சி :


முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசு திட்டங்களை எளிதில் தெரிந்துகொள்ள எதுவாகவும், போலி வலைத்தளங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உதவியாகவும் உள்ளது என பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.


இனிவரும் காலங்களில் இந்த சேவையில் மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்த்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அரசின் திட்டங்களை எளிதில் வாட்ஸ்அப்பில் பெற 9488400438 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.




மேலும் வாசிக்க..


Sabarimala: பைக்குகளில் வரக்கூடாது.. ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடு: முழு விபரம்