Sabarimala: பைக்குகளில் வரக்கூடாது.. ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடு: முழு விபரம்

சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கேரள அரசு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Continues below advertisement

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படிஅண்மையில்  ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு,  சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஜெயராமன் நம்பூதிரி மற்றிம் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு பதவியேற்பு மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. 

Continues below advertisement

 

மண்டல பூஜை:

கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், வழக்கத்தை காட்டிலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

 

தரிசன நேரத்தில் மாற்றம்:

 மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து,  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலால் சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல் போன்ற திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்கை மையமும், கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், கடும் கூட்ட நெரிசல் காரணமாக கடந்த 22ம் தேதி  முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்களுக்கு பயண கட்டுப்பாடு:

கேரள மோட்டார் வாகனத்துறை  வெளியிட்ட அறிக்கையில்,  சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. மோட்டார் சைக்கிள்களிலும் பம்பைக்கு செல்லக்கூடாது எனவும், அதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும்,  தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், கேரள மோட்டார் வாகனத்துறை பக்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

Continues below advertisement