விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி உள்ளார். அப்போது அவர் தனக்கும் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் சேர்த்து ரூ 6,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு துறையை நாடியுள்ளார். அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி கிருஷ்ணன்  ரூபாய் 6,000 ரசாயனம் தடவிய நோட்டுகளை தலையாரி ராஜேஷ் கண்ணன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் வழங்கியுள்ளார்.


அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் தலையாரி ராஜேஷ் கண்ணனை ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண