இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், தற்போது பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, 

திருநெல்வேலியில் இருந்து ஜூலை 9 ,16 ,23 ,30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10:45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்  அன்று நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.