திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி சுவாமி கோயில் கடற்கரை மணலில் கண்டெடுக்கப்பட்டது வெடிகுண்டா? என்பது குறித்து கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 




திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாழிகிணறு கடற்பகுதியில்   பக்தர்கள் வழக்கம் போல் நடமாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கடற்கரை மணலில் பாதி புதைத்து நிலையில் நாட்டு வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக்கூடிய வெடிபொருள் கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து அந்த வழியாக வந்த பக்தர்கள் அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.




சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வெடிகுண்டு மாதிரி தோற்றமளித்த பொருளை கைப்பற்றினார். கண்டெடுக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா? அல்லது சமீபத்தில் கோயில் திருவிழாவின் போது. சுவாமி சண்முகர் கோயிலுக்குள் சென்று போது வைக்கப்பட்ட வெடி வெடித்ததில். ஒன்று மட்டும் வெடிக்காமல் கடற்கரை மணலில் விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.




மேலும் கோயில் வளாகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வெடிபொருளை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்கரநாராயணனர் கோயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சம்பவம் நடந்த நிலையில். திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் வெடி பொருள் கிடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் மர்மபொருள் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் போலீஸ் டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பார்வையில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் குழுவுடன் சென்று அந்த வெடிபொருளை ஆய்வு செய்ததில். திருமணம் மற்றும் கோயில் திருவிழாக்களில் பயன்படும் நாட்டு பட்டாசு என்றும் அது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.