தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு இடங்களில் நேரடியாக சோதனையில் ஈடுபட்டார்.




தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.




மாவட்டத்தில் கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தாலும் கூட கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது.




இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக களமிறங்கி தூத்துக்குடி மாநகரில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கலந்த இரு தினங்களாக சோதனை நடத்தி வருகிறார் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் உப்பள பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து அவற்றின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.




இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தூத்துக்குடி சிப்காட் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் பாழடைந்து கிடக்கும் குடியிருப்புகளில் நேரடியாக சென்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்பி சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பொழுது மக்களிடம் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தற்போது குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




தூத்துக்குடி மாவட்ட மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் பெறுவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள 8300014567 என்ற செல்போன் எண் குறித்தும் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். இந்த எண்ணில் தொடர்பு தொடர்பு கொண்டு கஞ்சா மட்டும் போதை பொருட்கள் இப்பொழுதில் விற்பனை செய்யப்படும் தகவல் தெரிவிக்கவும் கேட்டு கொண்டார்.  இந்த திடீர் சோதனையின் போது தூத்துக்குடி நகர டிஎஸ்பி பொறுப்பு சம்பத், தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவகுமார், தாளமுத்து நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன்,சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணன் உடன் இருந்தனர்.