தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது.பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 319 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.தூத்துக்குடி மாநகராட்சி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 443 பேர் களத்தில் உள்ளனர்,தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 548 ஆண்கள், 1 லட்சத்து 66 ஆயிரத்து 836 பெண்கள், 70 திருநங்கைகள் ஆக மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 454 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 95 ஆயிரத்து 674 பேர், பெண்கள் 97 ஆயிரத்து 284 பேர், திருநங்கைகள் 6 பேர் ஆக மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் வாக்களித்து உள்ளனர். இது 59.11 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறைகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக சார்பில் 70 வது வார்டில் போட்டியிடும் அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் ஜெகன் பெரியசாமி மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதேபோன்று அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டில் போட்டியிடும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மகன் எஸ் பி எஸ் ராஜா மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அறைகளில் தலா 15 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் 2 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக 15 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 4 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் ஈடுபடுகின்றனா்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 9 இடங்களிலும் தற்போது தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் மொத்தம் 450 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.