தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலையை பற்றி அனாவசியமாக பேசினால் வெளியில் வர கால் இருக்காது பேச நாக்கு இறுக்காது என்று அமைச்சர் கீதாஜீவனுக்கு,  சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.




தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சிறுபான்மை அணியினர் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி மற்றும் மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசுகையில், “தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதாஜீவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமல பற்றி தேவையில்லாமல் பேசி வருகின்றார். அண்ணாமலை படித்து மெரிட்டில் பாஸ் செய்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர். அவர் தவறு செய்த குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜராக்குவது தான் வழக்கம். உங்களை போல  குற்றவாளியாக நீதிமன்றத்தில் நின்றது கிடையாது. எனவே எங்கள் தலைவர் அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. எங்கள் தலைவர் ஒன்றும் உங்கள் தலைவர் போல் கிடையாது அதனை மனதில் வைத்து பேசுங்கள்.




நீங்கள் முட்டையில் ஊழல் செய்தீர்கள் அதனை எங்கள் தலைவர் சுட்டி காட்டினார். அதற்கு, ‘அவன் இவன்’ என்று அனாவசியமாக பேசுவது தவறு எங்களுக்கும் பேச தெரியும் ஆனால் எங்கள் கட்சியில் அப்படி எங்களுக்கு சொல்லிதரவில்லை.சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடையவில்லை, பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டவில்லை என்னதான் தொகுதி மக்களுக்கு செய்தீர்கள்.




உங்கள் வேலைகளை பார்க்காமல் உங்கள் தவறுகளை சுட்டி காட்டும் எங்கள் தலைவர் அண்ணாமலையை தேவையில்லாமல் பேசினால். வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது” என்று திமுக அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடியை சேர்ந்த சுமார் 30 திமுக பெண் உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் அவர்களுக்கு வரவேற்பு அளித்த பாஜக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.




கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், எதிலும் நாங்க துணிந்து நிற்போம், நான் தெற்கத்தி பொண்ணு என்றும், முதல்வர், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம். சூடு, சொரணை இருந்தால் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்த்துடன் அண்ணாமலை முடித்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் நாங்கள் எதிர்த்து நிற்போம். ஊருக்குள் வந்து பேச முடியாது என சவால் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது