தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ளது சாத்தான்குளம். சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களாக மர்மகும்பல் செய்து வரும் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 


இரு சக்கர வாகனங்கள் மீது தாக்குதல்:


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் நடுத்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களின் ஸ்பார்க் பிளக்கின் வயரை மர்ம சைக்கோ கும்பல் ஒன்று வயரை துண்டித்து சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் உள்ள ஸ்பார்க் பிளக்கின் வயரை மர்ம சைக்கோ கும்பல் துண்டித்து விட்டு சென்றுள்ளது.


பரபரப்பு:


மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் இண்டிகேட்டர் லைட்டையும் உடைத்து சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்தும் மதியம் 3 மணியில் இருந்து 5 மணிக்குள் நடந்தது என கூறப்படுகிறது.


எனவே பட்டப் பகலில் இருசக்கர வாகனங்களின் ஸ்பார்க் பிளக்கை துண்டித்து செல்லும் இந்த மர்ம சைக்கோ கும்பலை போலீசார் பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கிடையே சண்டை! 12ஆம் வகுப்பு மாணவருக்கு கத்தி வெட்டு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!


மேலும் படிக்க:  Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்.. பல்லை உடைத்த கொடூரம்.. சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!