’சேறு, சகதி, சந்தோஷம்’ மீனை பிடித்து திருவிழா நடத்திய மக்கள்..!
சேற்றிலும், சகதியிலும் உருண்டு பிரள்வது மீனுக்காக மட்டுமல்ல ஒற்றுமைக்காகவும்தான் !
Continues below advertisement

மீனை பிடித்த மகிழ்ச்சியில்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்., மானாவாரி சாகுபடி பகுதியான இங்கு மழை பெய்தால் மட்டுமே விவசாயம், இந்நிலையில் தான் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளத்தில் மீன்பிடி திருவிழாவை கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர் மக்கள். கீழ விளாத்திகுளத்தில் இருக்கும் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள பொது கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும் கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சுகளை வாங்கி விடுவது வழக்கம், அவ்வாறு விடப்பட்ட மீன்களை பிடிக்க ஆடி திருவிழா ஆண்டுதோறும் அக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மழைகாலங்களில் அக்கிராமத்தில் உள்ள கண்மாய் முழுமையாக நிரம்பியது. இதனை தொடர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர் கண்மாயில் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். தற்போது ஆடி மாதம் என்பதால், ஆடி மாதத்தை ஆடித்திருவிழாவாக கொண்டாட முடிவு செய்தனர் மக்கள், எப்போதும்போல பொதுக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து ஆர்வமுடன் இணைத்து கண்மாயில் இறங்கி, சேற்றை கலக்கி ஆர்வமும் மீன்களை பிடித்தனர்.
கடந்த சில வருடங்களாக தண்ணீர் இல்லாததால் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் இந்த ஆண்டு மீன்பிடித் திருவிழா நடத்தி உள்ளனர். மக்கள் தங்களது கைகளில் உள்ள கூடை, சிறியவகை வலைக்கூடுகள் உள்ளிட்டவைகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் கலந்து கொண்ட மக்களுக்கு உளுவை, கெண்டை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்தது. மீன்களை பிடிக்க அவர்கள் பட்ட பாடு என்பது சொல்லி மாளாது ; அதை அனுபவித்து பார்க்க வேண்டும். சிக்காத மீன்களை சிக்க வைக்கும் முயற்சியில் மகிழ்ச்சியுடன் இறங்கி, கரைகண்டனர் மகக்ள். ஒரு சிலருக்கு 3 முதல் 10 கிலோ வரை எடை கொண்ட மீன் பிடிபட்டதால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். கிராம மக்களின் ஒற்றுமைக்காக ஆண்டுதோறும் இந்த மீன் பிடி திருவிழாவை அந்த கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றனர். இந்த மீன் பிடித் திருவிழா என்பது வெறும் மீனை பிடிப்பதற்காக அல்ல, எல்லாம் ஒன்று என்பதை ஊருக்கும் உலகிற்கும் உணர்த்தவும்தான். எல்லோரும் ஒன்றாக கண்மாயில் கால்பதித்து மீன்களை பிடிக்க களம் காணும்போது, வேற்றுமைகள் எல்லாம் கால் வைத்த அடுத்த கனமே கனன்று ஓடிவிடுகின்றன.
இப்படி ஊர் மக்களின் ஒன்றுமைக்காக நடத்தப்படும் இந்த மீன்பிடித் திருவிழா, பிடித்த மீன்களால் நாவிற்கு மட்டும் சுவையை கொடுக்காமல், ஒன்றுமை என்ற ஒன்றால் மனதிற்கும் நெருக்கம் அளிக்கிறது என மகிழ்ச்சி பொங்குகின்றனர் ஊர் மக்கள்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.