திருச்செந்தூர் அருகேயுள்ள மேலஆத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்கத்தில் சடலமாக மிதந்த புதுமண தம்பதிகள். திருமணம் முடிந்து நான்கே நாட்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேலஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மகன் பழனிக்குமார் (30). இவர் கேரள மாநிலத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காட்டை சேர்ந்த முத்துமாரி (21). இவர்களுக்கு கடந்த 10-ம்தேதி அதாவது நான்கு நாட்கள் முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் புதுமண தம்பதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இரவு வரை வீடு திரும்பவில்லை இதனால் இவர்கள் பெற்றோர் நேற்று காலையில் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது பழனிக்குமார் முத்து மாரி தம்பதி மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையத்தில் உள்ள நீர் தேக்கத்தில் சடலமாக மிதப்பதாக தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தப் புதுமண தம்பதிகள் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா?. அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா?. என்பது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி நான்கு நாட்கள் ஆகிய நிலையில் புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்