தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 210 மெகாவாட் திறன்கொண்ட 5 பிரிவுகள் இதன் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவு இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவுகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாகவும் மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பிரிவுகளில் கொதிகலன்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி வட மாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி இறங்கு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கன்வேயர் மூலம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், அனல் மின்நிலையத்தின் நிலக்கரி தட்டுப்பாட்டால் 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகி்றது. இதன் காரணமாக அனல் மின்நிலையத்தின் 3 ஆவது மற்றும் 5ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாட்டால் 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகி்றது.
ஆனால் இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிறுத்தப்படவில்லை என்றும் அனல்மின் நிலையத்தின் 3 மற்றும் 5 வது பிரிவு மின் உற்பத்தி மையங்களில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதனை சரிசெய்யும் பணியில் முழுமையாக ஈடுப்பட்டு உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் விரைவில் மின் உற்பத்தி துவக்கப்படும் என்றனர்.