எதிர்க்கட்சிகள் கேட்பது போல் பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் பார்லிமெண்டில் இல்லை உள்துறை அமைச்சர் பதிலளிக்க தயாராக இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி.




தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் ஆன்சைட் அருங்காட்சியக திறப்பு விழாவும் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர் கனிமொழி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். முதுமக்கள் தாழி இரும்பு பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டது அங்கேயே ஆன்சைட்  அருங்காட்சியகமாக தோண்டப்பட்ட குழிகளிலேயே மின்னொளி அமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது இதனை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார் தொடர்ந்து கண்ணாடி பேழைக்குள் இறங்கி அந்த பொருட்களை பார்வையிட்டார் தொடர்ந்து அப்பகுதியில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 500 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்,அதன் மாதிரியையும்  பார்வையிட்டார்.


விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நாட்டில் ஐந்து இடங்களில் அகழாய்வு பணிகள் மூலம் கிடைக்கும் பொருட்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது 2500 கோடி மதிப்பீட்டில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகிறது.  விரைவில் இப்பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய சாலை அருகே இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளதால் இப்பகுதி வழியாக கடந்து செல்லும் மக்களை ஈர்ப்பதாக இது அமையும்.  ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அலெக்சாண்டர் ரியோ காலத்தில் கிடைக்கப்பட்ட பொருட்கள் வெளிநாட்டில் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது .அவை அனைத்தையும் இந்தியா கொண்டுவரப்பட்டு ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.


மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பேச தயாராக இருக்கிறது இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க தயாராக இருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும் என இருப்பது சரியல்ல. 2013 ஆம் ஆண்டு மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் ஓராண்டு வரை நீடித்தது. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போதைய உள்துறை அமைச்சர் மணிப்பூர் செல்லவே இல்லை தற்போது அமைச்சா அங்கு சென்று மூன்று நாட்கள் முகாமிட்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து வந்துள்ளார் அவர் பாராளுமன்றத்தில் பதிலளிக்க தயாராக இருக்கிறார் எதிர்க்கட்சிகள் அதைக் கேட்க தயாராக இல்லை. 


பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது எங்களுக்கும் இருக்கிறது. என்ன தலைப்பில் பேச வேண்டும் என்ன பேச வேண்டும் யார் பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என அனைத்தையும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய நினைக்கிறது.  பாராளுமன்றத்தில் யார் பதிலளிக்க வேண்டும் பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும் என்பதற்கான எந்த மாதிரியான சட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.




ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை அவர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விகளுக்கு வரட்டும் பார்க்கலாம் என பதிலளித்து பேட்டியை முடித்தார்