ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அரங்கேறிய திருட்டு சம்பவம்

நேற்று காலை ராகுல் காந்தியின் நடை பயணத்தில் கலந்துகொண்ட இரண்டு பேரின் பரசுகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கடந்த 10-ம் தேதி இரவு கேரள எல்லைக்குள் யாத்திரை சென்றது. 11-ம் தேதி காலையில் பாறசாலையில் இருந்து கேரளாவில் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் கந்தி. கேரளாவில் இரண்டாம் நாளான நேற்று ராகுல் காலையில் நேமம் வெள்ளாயணி ஜங்சனில் இருந்து நடை பயணத்தை தொடங்கி பட்டத்தில் நிறைவு செய்தார். மாலை பட்டத்தில் தொடங்கி களக்கூட்டத்தில் நடை பயணத்தை நிறைவு செய்தார். இன்று காலை களக்கூட்டத்தில் இருந்து நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்துக்கு இடையே ராகுல்காந்தி விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் போராட்டக்குழுவை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். மேலும் ஒரு வீட்டில் திடீரென சென்று டீ குடித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
 

 
இந்த நிலையில்,நேற்று காலை ராகுல் காந்தியின் நடை பயணத்தில் கலந்துகொண்ட இரண்டு பேரின் பர்சுகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சி.சி.டி.வி கேமராவில் போலீசார் ஆய்வு செய்தபோது ராகுல் காந்தியின் நடை பயணத்தில் மக்களுடன் மக்களாக பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்ததது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட பிக் பாக்கெட் கும்பல் இரண்டு இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் போலீசுக்கு கிடைத்துள்ளன.
 

 
அவர்கள் நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், போலீஸ் லிஸ்டில் அவர்கள் பெயர்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கேரள போலீசார் சி.சி.டி.வி கேமராவில் பதிவான நான்கு பிக்பாக்கெட் திருடர்களின் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
Continues below advertisement