தூத்துக்குடியில் காணும் பொங்கல் முன்னிட்டு முயல் தீவு துறைமுக கடற்கரை முத்துநகர் கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.




பொங்கல் விழாவுக்கு மறுநாள் காணும் பொங்கல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இந்த காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு  மக்கள் வீடுகளில் இறைச்சி சமைத்தும் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காணும் உங்களை முன்னிட்டு மாநகரப் பகுதியில் உள்ள 10 பூங்காக்கள் தூய்மைப்படுத்தப்பட்டு அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.




பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள முயல் தீவுக்கு மக்கள் அதிக அளவில் சென்றனர். முயில் தீவில் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர் முயல் தீவுக்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டாடினர். மேலும் குழந்தைகள் கடலில் மீன் பிடித்து விளையாடும் விளையாடியும் மகிழ்ந்தனர். முயல்தீவுக்கு மக்கள் அனைவரும் போலீசாரின் பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.




தூத்துக்குடி நகர் பகுதியில் உள்ள ரோச் பூங்கா மற்றும் முத்து நகர் கடற்கரை பூங்காவுக்கு காலை முதலே மக்கள் அதிக அளவில் வர துவங்கினர். மேலும் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது. இதனால் பூங்காக்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே தெரிந்தது பூங்காக்களின் ஓரத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காக்களில் மக்கள் திரளாக வந்து ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாடி மகிழ்ந்தனர். மேலும் தங்கள் கொண்டு வந்திருந்த பொங்கல் சோறு, பனங்கிழங்கு, கரும்பு தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவில் மக்கள் அதிக அளவில் குடும்பமாக வந்து அங்குள்ள மரங்களுக்கு கீழே அமர்ந்து  உணவருந்தினர்.




தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை பகுதியில் காலை முதலில் இளைஞர்கள் பெரியவர்கள் அனைத்து தரப்பினரும் கூட்டம் கூட்டமாக வர துவங்கினர். இதனால் துறைமுக கடற்கரை பகுதி மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது, இளைஞர்கள் சிறுவர்கள் சிறுமிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். காணும் பொங்கல் முன்னிட்டு துறைமுகம் கடற்கரை பகுதியில் கடையில் அமைக்கப்பட்டிருந்தன.




காணும் பொங்கலை  முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுற்றுலாத்தலங்கள் பூங்காக்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்வது போன்றவற்றை கட்டுப்படுத்த ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து  போலீசார் கண்காணித்தனர். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களில் ஒருவரோடு ஒருவராக ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டனர். மதுபான விற்பனை கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு தனிப்படை போலீசார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.