"தமிழனின் பெருமை தமிழின் பெருமை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது" - கனிமொழி எம்.பி.

3000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட நமது தமிழ் மொழி தற்போது பேசப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் பல மொழிகள் காணாமல் போய்விட்டது.

Continues below advertisement

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Continues below advertisement


இதையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விடம் பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காத ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்தனர்.


இதனையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக திருக்கோளூரில் வரலாற்றுக் கால கல்வெட்டுகளை சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில் அருகே மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இந்த அகழாய்வின்போது வரலாற்றுக் காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 20 செமீ ஆழத்தில் ஐந்து வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல்கள் 26 செமீ நீளம் 18 செமீ அகலம் 8 செமீ உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக் குழியில் நான்கு தரைத்தளங்கள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நான்காம் தரைத்தளத்தில் அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப் பானை வகை ஓடுகள் கிடைக்கின்றன. மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைக்க பெற்றுள்ளது.


இந்நிலையில், அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட வருகை தந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை தந்தார். மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், கள ஆய்வாளர் எத்திஸ்ராஜ் ஆகியோர் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தனர். பின்னர் அருகில் இருந்த சேர சோழ பாண்டிஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரத்தில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் வாழ்விடம் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகளை கனிமொழி தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்திய பேசிய கனிமொழி, "தமிழ் மக்களின் பெருமை என்னவென்றால் மிக மூத்த குடி தமிழ்க்குடி. தமிழின் பெருமை தமிழின் பெருமை என்னவென்றால் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட நமது தமிழ் மொழி தற்போது பேசப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் பல மொழிகள் காணாமல் போய்விட்டது" என்றார்.

Continues below advertisement