சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை டவுண் மாநாகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சியின் மணிமண்டபத்தில் அள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநில பாடதிட்டம் குறித்து ஆளுநர் விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆளுநர் ரவி அவர்கள் இப்படிப்பட்ட தர்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாக தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை, அல்லது சந்தேக கண்களுடன் பார்க்கிறாரா என தெரியவில்லை. இன்று விண்வெளியில் சந்தரயான் 3 தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளது. அதில் வீரமுத்துவேல் என்பவர் இந்த திட்டத்தின் இயக்குனராக இருந்தவர். அவர் வீட்டின் முதல் பட்டதாரி, தமிழ் வழி கல்வி கற்றவர் அரசு பள்ளியில் பயின்றவர். இவர் மட்டும் அல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குனராக  இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை, தற்போது வனிதா, நிஜாஷா, நாராயணன், ராஜராஜன், சங்கரன்  இருக்கிறார்கள். சந்திரயான் 2 தரையிறங்கும் போது கீழே விழுந்துவிட்டது. அப்போது  சிவன் தான் தலைவராக இருந்தார், அது ஏன் விழுந்தது என ஆராய்ச்சி செய்ய இந்தியா முழுவதும் 11 விஞ்ஞானிகள் குழு அமைத்து அதன் தலைவராக இருந்தது கன்னியாகுமரியை சேர்ந்த நாராயணன்  தான். அவர் தலைமையில் ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்து சந்திரயான் 3  வெற்றி பெற செய்தது அவர் தான். இதில் பெருமை என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அதிகமான விஞ்ஞானிகள் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள்தான் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா  என்றார்.




மேலும் தமிழக முதல்வர்  சாதனை படைத்த தபிழகத்தைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளை கடந்த 6 மாத காலத்திற்கு முன்னாள் அழைத்து அவர்களை பாராட்டி 25 லட்சம் மற்றும் விருது வழங்கினார். அதோடு மட்டும் இல்லாமல் இந்த விஞ்ஞானிகளின் பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படும், தமிழ் படித்து வந்து உலகம் போற்றும் உலகமே வியக்கும்  விஞ்ஞானிகளாக இருக்கின்றனர்.   அதை தாங்க முடியாமல் சொன்னார்களா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார் என கூறினார்