தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.




நெல்லையில் நடைபெற இருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது சமத்துவ மக்கள் கட்சியினர் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், "வருகின்ற பாராளுமன்ற தேர்தலையும் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலையும் எப்படி சந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான பொறுப்பாளர்களை இன்றைய மாநாட்டில் அறிவிக்க இருக்கின்றோம். சென்னை மழை பாதிப்பு என்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று மிகபெரிய பாதிப்பு இதுவரை பல அடிப்படை வசதிகளை சென்னையில் செய்யாமல்-தான் இருக்கின்றனர் என்பது வேதனை அதைபோல் சென்னையில் யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையும் நாம் யாருக்காவது உதவலாம் என்று நினைத்தால் வெளியில் செல்ல முடியாத நிலையும்தான் சென்னையில் உள்ளது.




மின்சாரம் பிரச்சனை ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாத தொலைதொடர்பு பிரச்சனை என நிறைய பிரச்சினைகளை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து இதுபோல் பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. பாதிப்பு ஏற்பட்ட பின்னர் மக்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர். ஆனால் தேர்தல் களத்தில் மக்கள் அமைதியாக இருக்கின்றனர். தேர்தல் களத்தில் மக்கள் எதிர்ப்பை காட்டினால்-தான் ஆட்சிகளும் காட்சிகளும் மாறும்" என்றார்.




மேலும், குறைகூறக்கூடாது என்று பார்த்தால் நிறைவாக இல்லை என்பதுதான் உண்மை என்ற நிலை உருவாகி உள்ளது என்றார். அதைபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தென்மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் தென் தமிழகத்தில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தான் எனவே தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாகினாலே பிரச்னைகள் இருக்காது என்றார்.