ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா, பரமக்குடி அருகே திருவரங்கம் கிராமத்தில் திரு இருதய மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக ஆரோக்கிய அருள் தோமஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த ஓராண்டு காலமாக அப்பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆரோக்கிய அருள் தோமஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து பயன் அளிக்காததால் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 



 

அதன்பேரில் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் மகளிர் போலீசார் கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அவர் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்ததால் ஆரோக்கிய அருள் தோமஸ்  மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது,'இந்தப் இந்தப் பள்ளிக்கூடத்தில 800க்கும் மேற்பட்ட புள்ளைங்க படிச்சிக்கிட்டு வாறாங்க,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 10 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ரிவிசன் டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றி வரும் வாணி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய அருள் தாமஸ் என்பவர் பத்தாம் வகுப்பு D பிரிவில் பயிலும்  மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செஞ்சிருக்காரு.பாதிக்கப்பட்ட 4  மாணவிகள் இதுகுறித்து தலைமை ஆசிரியர்ட்ட சொல்லிருக்காங்க, நடவடிக்கை எடுக்கவேண்டிய தலைமையாசிரியர் அருளானந்த், தவறு செய்த கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள்தாமசை கண்டிக்காம விட்டுட்டாரு,இதனால,  மனவேதனை அடைந்த அந்த மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு நல துறைக்கு தகவல் அனுப்பியதன் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் பரமக்குடி அனைத்து   மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நேரடியாக விசாரணையை  தொடங்கியிருக்காங்கன்னு சொன்னாங்க.

 



 

 

மேலும் காவல்துறையினர் தரப்பில் பேசும்போது, ஆரோக்கிய அருள் தாமஸ் செயல்பாடு  திருப்திகரமாக இல்லையெனவும்,  அவருடைய பேச்சும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருந்துள்ளது.அதோடு அல்லாமல் அதே பள்ளியில் பணியாற்றும் மற்றும் இரு ஆசிரியர்களும்  மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தெரிய வந்தது .ஆனால் பள்ளியின் தலைமையாசிரியர் இது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட விளைவுதான் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




 

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் ஆரோக்கியஅருள் தாமஸ் தலைமறைவான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கணித ஆசிரியருக்கு உடந்தையாகச் பள்ளி தலைமையாசிரியர் செயல்பட்டதாக மாணவிகள் போலீசிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.