ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் சவுமியா (25) பி.இ. பட்டதாரி. இவர் அரசுப்பணி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவரிடம் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சேக் முகம்மது என்ற அபு (27) என்பவர் அறிமுகமாகி பழகி செல்போன் எண்ணை வாங்கி பேசி வந்துள்ளார். சவுமியாவை காதலிப்பதாகவும், அவரை, திருமணம் செய்து கொள்வதாகவும்  கூறி நெருக்கமாக பழகியுள்ளார். அவரை தனது வீட்டுக்கும் வரவழைத்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதன்பின்னர், திருமணம் செய்து கொள்ள சேக் முகம்மது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சேக் முகம்மதுவின் பெற்றோர், பின்னர் சவுமியா அழகாக இல்லை, வரதட்சணை அதிகம் தர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த சவுமியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.





இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக சவுமியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு, மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், இதேபோல் பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், 'இது லவ் ஜிகாத்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு தகவல்களையும் எழுதி இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சேக் முகம்மது உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றனர். இது பற்றி நாம் காவல்துறைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, சவுமியா 25 வயது வயது இளம்பெண், இன்ஜினியரிங் படித்தவர். இவரது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர், அன்வர் மகன் ஷேக்முகமது, 30.




இவர் 2018ல் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது, அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். ஷேக் முகமது அம்மாவும் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணிடம் உறவு கொண்டுள்ளார்.இந்நிலையில், 2019ல் ஷேக் முகமது குடும்பம் திருச்சி சென்றது. அதன்பின், திருமணம் செய்ய மறுத்ததோடு அலைபேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார்.




இதனால், மனமுடைந்த பெண் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தில், மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், இதேபோல் பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், 'இது லவ் ஜிகாத்' என்றும் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர், தாய், மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கேணிக்கரை போலீசார், நான்கு பேர் மீதும் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். ஷேக் முகமதுவை கைது செய்ய, தனிப்படை போலீசார் திருச்சி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.