நரிக்குறவர்களை அரசுப்பேருந்தில்  இருந்து இறக்கிவிட்ட விவகாரம்-நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்

’’பயணிகள் தவறு செய்தாலும் கூட அவர்களை கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை இந்த விவகாரத்தில் வீடியோ பதிவை பார்க்கும் போது தவறாக உள்ளது’’

Continues below advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவர்கள் பயணிகள் கண்டித்த  நிலையில், நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக  பரவியது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து பேருந்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் குழுக்களாக வருவது வழக்கம். இவர்கள் நாகர்கோயில் பேருந்து நிலையத்தை சுற்றியும் பேருந்து நிலையத்திலும் ஊசி பாசி விற்பனை செய்வதோடு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம் நேற்று திருநெல்வேலி பேருந்தில் பயணிக்க  மூன்று பேர் ஏறியுள்ளனர். அதில் அவர்களுக்குள் சண்டையிட்டபடி சத்தமிட்டு கொண்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம்சுழித்த நிலையில் அவர்களை இறக்கி விட நடத்துனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.

Continues below advertisement



இதில் ஏற்கனவே அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அழுது கொண்டு இருந்த குழந்தை, ஒரு முதியவர் மற்றும் பெண்மணி ஒருவர் என மூன்று பேரும் அவர்களது உடமைகளுடன்  பேருந்தில் இருந்து இறக்கி விடும் காட்சிகளை வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில்  பதிவிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாக பரவியது இதனை தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இவரிடம் நெல்லை பேருந்து நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இதனை தொடர்ந்து அரசு பேருந்து டிரைவர் நெல்சன் மற்றும் நடத்துனர் ஜெயதாஸ் ஆகியோரை சஸ்பென்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




இதற்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது நரி குறவர்கள் ஆக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி பேருந்தில் பயணம் செய்யும் போது அவர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், பயணிகள் தவறு செய்தாலும் கூட அவர்களை கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை இந்த விவகாரத்தில் வீடியோ பதிவை பார்க்கும் போது தவறாக உள்ளது அதே போல் இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்க வில்லை போன்ற காரணங்களுக்காக தற்போது சஸ்பென்ட் செய்துள்ளோம் என தகவல் கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola