ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஒரு அணியாகவும், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் மற்றொரு அணியாகவும்  திமுக இரண்டு  தலைமையின் கீழ்  இயங்கி வருவது அனைவருக்கும் அறிந்த விஷயமாக இருந்தாலும், இன்று நடந்த முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தேர்தலில்  அமைச்சர் தரப்பு ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவர்  மாவட்டச் செயலாளரின் ஆதரவுடன் களமிறங்கிய ஒரே கட்சியை சேர்ந்த  திமுக கவுன்சிலரை  எதிர்த்து போட்டியிட்ட நிலையில், தனக்கு சாதகமாக தேர்தல் நடைபெறாவிட்டால் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கையில் உஜாலா சொட்டுநீல பாட்டிலுடன் வந்திருந்தது பனிபோராய் இருந்த கோஷ்டி பூசல்  எரிமலையாய் வெடித்து வெளியில்  வந்துள்ளது.

 

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு  தேர்தலின்போது ஆளுங்கட்சியான அமைச்சர் ஆதரவு  பெண்  கவுன்சிலர் ஒருவர் மை பாட்டிலை மறைத்து எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக் காண தேர்தல் இன்று நடந்தது. முதுகுளத்தூர் ஊராட்சி  ஒன்றியத்திஒன்றிய குழு  தலைவராகவும் இருந்த  தர்மர் அதிமுக சார்பில் மாநிலளங்களவை  உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒன்றிய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதற்காக, எஸ்.பி.தங்கதுரை உத்தரவின் பேரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக் கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 

தேர்தலின்போது, போலீசார்  தீவிர சோதனைக்கு பின்னரே அனைத்து  கவுன்சிலர்களையும்  தேர்தல்  நடத்தும் அறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமைச்சர் ஆதரவாளரான  திமுகவை சேர்ந்த  3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி என்பவரை பெண் காவலர்கள் சோதனை யிட்ட போது  அவரது ஆடைக்குள் 50 மில்லி கொண்ட உஜாலா சொட்டு  நீல பாட்டிலை  (மை) மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனடிப்படையில் பெண் போலீசார் அவரிடம் இருந்து அந்த பாட்டிலை  பறித்து அதிலிருந்த  மையை கீழே ஊற்றினர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

இதில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக தலைமையின் சார்பில் அறிவிக்க பட்ட  மாவட்ட பொறுப்பாளரின் ஆதரவாளரான 2வது வார்டு கவுன்சிலர்  சண்முகப்பிரியா மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்  3வது வார்டு திமுக வேட்பாளர் நாக ஜோதியும் போட்டியிட்டனர். இதனையடுத்து, நடத்தப்பட்ட தேர்தலில் திமுக தலைமையால்  அறிவிக்கப்பட்ட  சண்முகப்பிரியா  8 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து  போட்டியிட்ட நாக ஜோதி 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் அதிமுக வசம் இருந்த ஒன்றிய குழு தலைவர் பதவி திமுகவின் கேட்டுக்குள் சென்றது.





இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடலில்  உஜாலா சொட்டு நீளத்தை மறைத்து எடுத்து வந்த திமுக கவுன்சிலரை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பகிரங்கமாக சண்டையிட்டது கோஷ்டி பூசலின் உச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

 

கட்டுக்கோப்பான கட்சியா திமுக.!

 

ஒரே கட்சி வேட்பாளரை தோற்கடிக்க உஜாலா பாட்டிலுடன் வந்த வேடிக்கையான சம்பவமும், தன் கட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த மாவட்ட பொறுப்பாளரையும் திமுகவில் மட்டுமே காண முடியும் என எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும்  விமர்சிகின்றனர்.