அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மதத்தை காரணம் காட்டுவது பச்சையான அரசியல் என தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று தமிழக தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முன்பாக 1.80 கோடி செலவில் அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்ட உள்ளதற்கு விளக்கேற்றி துவங்கி வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன எனவும், 1.50 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சி சாலைப்பணிகள் என மாநகராட்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், பேருந்து நிலையம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்

 



 

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் மருத்துவர்களின் வருகை இல்லாத நிலை உள்ளது எனவும் அதனை உடனடியாக சீரமைத்து விடுவோம், குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியில் மத்திய அரசு தொடக்கம் முதல் முடிவு வரை தவறான திட்டத்தை தீட்டியுள்ளது எனவும் நான்குவழிச்சாலை பணிகளில் அவர்களது திட்டமிடல் முழுமையும் தவறானது. தமிழக அரசின் முயற்சியால் மட்டுமே தற்போது சில பணிகள் நடக்கிறது எனவும் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை பணிக்கு தேவையான நிதி கொடுக்காததும், தவறான திட்டமிடல் குறித்து பல முறை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் மத்திய அரசிடம் கூறியுள்ளார். தற்போது அதற்கான மறு திட்டமிடல் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

 



 

மேலும் அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத சடங்குகள் குறித்த கேள்விக்கு, ”நாங்கள் போகும் இடங்களில் சில இடங்களில் பூஜை நடக்கிறது. சில இடங்களில் பூஜை நடக்கவில்லை, அது மக்களின் உணர்வுகள். இதில் கருத்து கூற எதுவும் இல்லை. என்னை பொறுத்தமட்டில் மக்களின் உணர்விற்கு விட்டுவிட வேண்டும். திராவிட மாடல் மதசார்பற்ற மாடல், அதில் எந்த மத சடங்குளையும் தடுக்கும் நோக்கம் கிடையாது. எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மட்டுமே உள்ளது. ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களை மதத்தை காரணம் காட்டி வரக்கூடாது என்றோ அல்லது வரலாம் என்றோ கூறுவது பச்சையான அரசியல் எனவும் சாடினார்.