போலிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்: நெல்லை மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை:


போலியான வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான செய்திகள் அனுப்புகிறார்கள். ஹேக்கர்கள் இந்த குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ என மாற்றுகிறார்கள்.  இந்த பொய்யான செய்திகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. புள்ளிகளை கூறுமாறு கூறும் இணைப்புகளை கொண்டிருக்கும் இதனை நம்பி விவரங்களைத் தருவோருக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் நெட்வொர்க்குகளில் மொபைல் எண்ணுக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. 


மோசடிகள் எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகளை ரிடீம் செய்யுமாறு அறிவுறுத்துவர்:


கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் இந்த மோசடி தொடர்பாக 73 சைபர் புகார்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டலில் பெறப்பட்டு உள்ளது. மோசடிக்காரர்கள் முதலில் ஒரு பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனை ஹேக் செய்வதன் மூலம் அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள். பொய்யான செய்திகளை பாதிக்கப்பட்டவரின் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட குழுக்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ என மாற்றுகிறார்கள். இதனால் செய்திகள் உண்மையானதாக தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகளை ரிடீம் செய்யுமாறு கூறுவார்கள். 


இதில் பாதிக்கப்பட்டால் அச்சம் வேண்டாம்:


பரிசு புள்ளிகள் காலாவதியாக உள்ளதாக கூறி அவசரப்படுத்துவார்கள். தாங்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயரில் வரும் போலியான Link-களை அனுப்பி ஏமாற்றுகிறார்கள். பலர் இந்த மோசடியில் சிக்கி விடுகிறார்கள். இத்தகைய போலியான நடவடிக்கையில் திருநெல்வேலி மாநகர மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை கண்டறிந்தால் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம் சைபர் குற்ற தொலைபேசி உதவி எண்.1930-ஐ உடனடியாக அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் என திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.