நெல்லை மாவட்டம் சீலாத்திகுளம் மேல தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (49). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. இசக்கிமுத்துவின் மகன் வேல்முருகன்(21) வள்ளியூர் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்துவிற்கும் மனைவி மீனாட்சிக்கும் கருத்து வேறுபாடு கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த சூழலில் தனது படிப்பிற்காக வேல்முருகன் சீலாத்திகுளத்தில் தந்தையுடன் தங்கி அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் நாலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது தனது கல்லூரி படிப்பிற்கும்,, வீட்டு செலவிற்கும் பணம் தேவைப்பட்ட நிலையில் வேல்முருகன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் மகன் வேல்முருகன் மீது ஆத்திரம் தந்தை இசக்கிமுத்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடந்த நிலையில் அன்று இரவு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது ஆத்திரத்தில் இருந்த இசக்கிமுத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மகன் வேல்முருகனை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பொறியியல் மாணவர் வேல்முருகன் துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கானது நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கானது விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நீதிபதி பத்மநாபன் மகனை கொன்ற தந்தை இசக்கிமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மு கருணாநிதி அரசு சார்பில் ஆஜராகி வாதாடினார் படிப்பு செலவிற்கு பணம் கேட்ட மகனை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவத்தில் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.