துணை மேயர் தலைமையில் மன்றக்கூட்டம்:


நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக பதவி விலகல் கடிதம் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவிடம் வழங்கப்பட்டது, இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி ஜூலை 8 ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் மேயர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை கவுன்சில் தான் ஏற்கவேண்டும். ஆணையர் தகவல் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில் இன்று காலை சரியாக 10.30க்கு மாமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள், துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் ராஜூ தலைமையில் நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்தார். அப்போது மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு கடிதத்தின் மீது ஒப்புதல் பெறப்படும் நடவடிக்கைக்காக மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெற்றது. 


கைகளை மேஜையில் தட்டி மேயர் ராஜினாமா ஒப்புதல்:


அதன் பின்னர் பதவி விலகல் கடிதம் மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் மேஜையை தட்டி தங்களின் ஒப்புதலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே கூட்டம் முடிவுற்றதாக பொறுப்பு மேயர் ராஜு தெரிவித்து கூட்டம் முடிவுற்றது. மேயர் பதவி காலியானதாக மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர்  கூட்டத்தின் தீர்மானம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.


 மேயரின் ராஜினாமா கடிதத்திற்கு காரணம்:


நெல்லை மாநகராட்சியில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்தது.  இந்த மோதல் போக்கு மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் அனைவருமே மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தனர்.   இந்த மோதல் போக்கானது மேயர் பொறுப்பேற்ற ஒரு சில வாரத்தில் இருந்து கடந்த வாரம் வரை நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரை எதிரொலித்தது. குறிப்பாக மேயர் மாமன்ற உறுப்பினர்கள் மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையிலே திருநெல்வேலி மாநகராட்சி இருந்தது. இதனால் மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமையும் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் தான் நெல்லை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமை அறிவுறுத்தலின் பேரில் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.