நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 38 இவர் நெல்லை பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார் அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப்பெண் மணிகண்டனை கடுமையாக தாக்கி திட்டியுள்ளார். உடனே சக பயணிகளும் மணிகண்டனை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும் ஆத்திரத்தில் தாங்க முடியாத அந்த பெண் போலீசார் கண்முன்னேயே மணிகண்டனை சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் போலீசார் மணிகண்டனை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தென்காசி : மாப்பொடி, மஞ்சள்.. உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழா நிகழ்வு..
தற்போது மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது பொது இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை தனி ஆளாக எதிர் கொண்ட பெண்ணின் இச்செயல் பாராட்டைப் பெற்றுள்ளது இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தென்காசி : மாப்பொடி, மஞ்சள்.. உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழா நிகழ்வு..