நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமு (56). இவருக்கு மேலப்பாளையம் அருகே ஹாமீம் பள்ளி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஆன இடம் ஒன்று உள்ளது. இங்கு வசித்து வந்த நிலையில் வியாபாரம் காரணமாக சிறிது நாட்களுக்கு முன் சென்னை சென்று உள்ளார். பின்னர் ஊர் திரும்பிய அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது வீடு தனி நபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குறிப்பாக தனது வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு வீட்டை வேறு ஒரு பூட்டு போட்டு சுடலை என்பவர் அபகரித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் இது குறித்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.




ஆனால் தனது புகார் தொடர்பாக அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று நெல்லை ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தண்ணீரை எடுத்து அப்பெண்ணின் உடலில் ஊற்றி அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எனது கணவர் மன நலம் சரியில்லாதவர், இந்த நிலையில் தான் வசித்து வரும் வீட்டை சுடலை என்பவர் தனது வீடு என உரிமை கொண்டாடி என்னை வீட்டிற்கு வந்து அடித்து மிரட்டினர். நான் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தேன், ஆனால் மன வேதனையில் இது போன்ற முடிவை எடுத்துவிட்டேன். எனவே ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி வீட்டை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ராமுவை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க அழைத்து சென்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண