நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்புக்கான அஸ்திவாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாக பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகள் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே அதிகப்படுத்தி உள்ளது. தளபதி என்று ரசிகர்களால்  அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது 48வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இந்தநிலையில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.


அவரது பிறந்தநாளை முன்னிட்டு  பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகள் அவர் அரசியலுக்கு வருவதை முன்னோட்டமாக அமைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரிரு நாட்களுக்கு முன் நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு நேரில் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதும் அதில் அவர் பேசிய விதமும் வரக்கூடிய தேர்தலுக்கு முன்பு அவர் தீவிர அரசியலுக்கு வர திட்டமிட்டிருப்பதாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு நெல்லை மாநகர் பகுதியில் குறிப்பாக நெல்லை சந்திப்பு, டவுண் உள்ளிட்ட பகுதிகளில் பாளையங்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.


அதில் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமில்லாமல் அரசியலில் நடிகர் விஜய் வருகைக்கான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவை கட்டிடத்தின் புகைப்படம் அதில் இடம் பெற்றுள்ளதோடு, அந்த போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வயதான பெண்மணி உடன் இருக்கும் புகைப்படமும், இடம் பெற்றிருக்கும் வகையில் நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தேதீரும் என்ற வசனங்களும் போஸ்டரில் இடம் பெற்று இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவரது அரசியல் செயல்பாடுகள் இருப்பதாகவும், அடுத்தடுத்த முன்னெடுப்புகளை பொறுத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும் என்றும் அனைவராலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது,


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண