பாஜகவினர் பிணத்தின் மீது மேடை போட்டு பிரச்சாரம் செய்வார்கள் - சீமான் விமர்சனம்

பாஜகவினர் பிணத்தின் மீது மேடை போட்டு பிரச்சாரம் செய்வார்கள் - சீமான் விமர்சனம்

Continues below advertisement

நெல்லை மாவட்டம் மானூரில் அரசு கலை கல்லூரி கட்டுவதற்கு முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டுமான பணிகள் நடைபெற்றுது. பின் அந்தப் பணிகள் கைவிடப்பட்டு மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பழைய கல்லூரி கட்டுமானம் நடைபெற்ற இடத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Continues below advertisement

"மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கையால் ஆகாத அரசாக இருக்கிறது. இந்த நாடு, இந்த அதிகாரம் எல்லாம் தனிப்பட்ட முதலாளிகளின் வளர்ச்சிக்கு  தேவைக்கு கட்டமைக்கப்படுதே தவிர மக்களிடம் இருந்து வாக்கை பெற்று மக்களாட்சி ஜனநாயகம் என பேசிக்கொண்டு  மக்களின் நலனை பற்றி ஒரு துளி கூட கவலைப்படவில்லை. கார்பரேட்டுகளின் கைக்கூலிகளாக இருக்கிறது" என்றார்

தொடர்ந்து அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சையை நேரலை செய்தால்தான் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று தெரியும். உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள். 2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் குறித்து எழுப்பிய கேள்விக்கு ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்த பிரதமர் மோடி மே மாதம் அல்லது வரக்கூடிய டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் என்றும் அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவார்” என்றார்.

”காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஊழல் ஆட்சியால் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. மோடியை வீழ்த்த மாநில கட்சிகள் வலுப்பெற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி நடத்தும் விதமாக பேச்சுவார்த்தை மூலம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக தேர்ந்தெடுக்கலாம் என்றும் தெரிவித்தார் அதை விடுத்து பொது வேட்பாளராக மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை நிறுத்தினால் அவர் ஊதி தள்ளி விடுவார்.

ஒரு பட்டனை அழுத்தினால் குண்டு விழும் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறிக் கொள்வது போன்று ஒரே பட்டனை அழுத்தினால் பாஜகவிற்கு வாக்குகள் விழும் வகையில் ஏற்பாடுகளை மோடி செய்வார். பணம் கொடுப்பவர்கள் பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை. நடிகர் விஜய் தொடர்பான அரசியல் கேள்விக்கு பதில் அளித்த சீமான் நன்மை செய்யும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்தால் தவறில்லை,

அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார் நடிகர் விஜய்யின் ஆதரவு கேட்பீர்களா என்று கேள்விக்கு நடிகர் விஜய்யின் உதவி தனக்கு தேவையில்லை என்று தெரிவித்தார். அத்துடன் தற்போது இந்தியாவில் அதிகமாக திரைப்படத்திற்கு சம்பளம் பெறும் நடிகர் விஜய் தான். தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் இருப்பதும் அவருக்குத்தான். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்” என்றும் தெரிவித்தார்.

“சட்டத்தின் ஆட்சி நடைபெறும் என்று கூறி மணிப்பூரில் ஆட்சிக்கு வந்த அவர்கள் அந்த மாநிலமே தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக பிரித்தாலும் கொள்கையை பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்வதுதான் பாஜகவின் வேலை. மக்களுக்கு நன்மை செய்வோம் என்று கூறிக் கொள்ளும் பாஜக பிணத்தின் மீது மேடை போட்டு பிரச்சாரம் செய்வார்கள். பாஜகவும் - திமுகவும் ஈருடல் ஒருதலை போன்றது என்றும் விமர்சனம் செய்தார்.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola