தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், விபத்தில் சிக்கும் வாகனங்களை துரிதமாக மீட்கும் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் ரோந்து வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளால் ஒரு சில மாவட்டங்களில் ரோந்து வாகனங்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த சுழலில் அதிநவீன கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்ட மேம்பட்ட ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் ஏதேனும் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்றால்  24 மணி நேர ரோந்து பணியில் இருக்கும் போலீசாருக்கு கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் சென்றடையும். உடனடியாக  ரோந்து வாகனம் அப்பகுதிக்கு சென்று  உதவி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. 




குறிப்பாக நெல்லை மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், காவல்துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நெல்லையில் இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த ரோந்து வாகனங்களில் தற்போது சோலார் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், அறிவுரையின்படி சூரிய சக்தியுடன்(சோலார்) இயங்க கூடிய  சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களை   நெல்லை மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர்‌ நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை மாவட்ட காவல் துறையில் தான்  நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களில் சூரிய சக்தியில்(சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும்  குற்ற சம்பவங்களையும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்க முடியும் எனவும், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண