Nellai: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்

நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிறிது தூரத்தில் திவ்யா மற்றும் ராகுல் சடலமாக மிதந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

Continues below advertisement

தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ராகுல்(25), மகள் திவ்யா(32), இவர் புளியங்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திவ்யா, ராகுல் தங்களது உறவினர்கள் என 8 பேர் காரில் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திருப்படைமருதூருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள கோவிலுக்கு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். பின்னர்  எதிர்பாராத விதமாக திவ்யா, ராகுல் ஸ்ரீகணேஷ் ஆகிய மூவர் ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

பின் உடனிருந்த உறவினர்கள் அனைவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீகணேஷ் பத்திரமாக மீட்கப்பட்டார். இருப்பினும் திவ்யா மற்றும் ராகுல் இருவரும் ஆற்றில் மூழ்கி மாயமானார். தொடர்ந்து அவர்களை மீட்க முடியாத நிலையில் இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்து வந்த அம்பை மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிறிது தூரத்தில் திவ்யா மற்றும் ராகுல் சடலமாக மிதந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. தொடர்ந்து அப்பகுதியினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி இறந்த திவ்யாவின் கணவர் பரமசிவன் கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் மற்றும் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola