அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள சூரசம்கார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார்.




அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலுக்கு வந்தார். கோயில் விருந்தினர் மாளிகை முன்பு அதிமுகவினர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயிலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். கோயில் சண்மு விலாச மண்டபத்தில் அவருக்கு முன்னாள் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில் திரிசுதந்திரர்கள் சார்பில் கும்பமரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி மூலவர், சண்முகர், தெக்ஷிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சூரசம்ஹாரமூர்த்தி சன்னதியில் அவர், எதிரிகளை வீழ்த்தக்கூடிய சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார்.




அங்கு அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவருக்கு சண்முக விலாச மண்டபத்தில் பழக்கடை திருப்பதி தலைமையில் அதிமுகவினர் 4 அடி வேல் மற்றும் பழங்கள் வழங்கினர். அதிமுக நகர செயலாளர் மகேந்திரன் ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சுரேஷ் பாபு ஆகியோர் சண்முகர் மற்றும் மூலவர் பெரிய படங்களை வழங்கினர். பின்னர் அவர் காரில் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். அவருடன் கடம்பூர் ராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார், தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், சின்னத்துரை, கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி, மாவட்ட செயலாளர் கணேசராஜா, பாப்புலர் முத்தையா உள்பட பலர் வந்தனர். 




திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் தரிசனம் முடித்து விட்டு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருச்செந்தூர் நகர பஸ் ஸ்டாண்ட் முன்பு அதிமுக நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, அதிமுக மாவட்ட பிரதிநிதி சுந்தர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண