நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே உள்ளது அணைக்கரை கிராமம். இங்கு தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். குறிப்பாக கல்யாணம், கொடை மற்றும் பல்வேறு திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக வெடி தயாரித்து வருகின்றனர். இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமார் என்பவர் ரசாயன கலவை செய்யும் குடோனில் வேலை பார்த்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரெனெ வெடி வெடித்துள்ளது. இச்சூழலில் அங்கு வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே ஜே ஜே நகரை சேர்ந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் சம்பவ இடத்தில் திசையன் விளை தாசில்தார் பத்மபிரியா, வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண