சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின் படி தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆம் தேதியான நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும், அதே போல தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாளை மறுநாள் 21 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.




மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, தென்தமிழக கடற்கரைப்பகுதி மற்றும் தென்மேற்கு வங்ககடற்பகுதிகளில் சுழல் காற்றானது  மணிக்கு 45 கி.மீ  முதல் 65  கி.மீ வரை வீசக்கூடும். எனவே நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையை பொறுத்தவரை 10 மீனவ கிராமங்கள் உள்ளது. அதன்படி  உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட பத்து கடற்கரை கிராமங்களை சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து  கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள்  கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.








 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண