பங்குனி உத்திர திருவிழா 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து  மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது குறித்து அறிவிப்பில் கூறியதாவது, ஏப் 5 ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேலும் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

உள்ளூர் விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 06.05.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண