நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது  மகன் மாரிராஜ்(32). இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு மாரிராஜ் திடீரென அவரது வீட்டில் வைத்து விஷமருந்தியதாக தெரிகிறது. தொடர்ந்து மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட உறவினர் கதறி அழுதனர். மேலும் இது தொடர்பாக பாளையங்கோட்டை போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மாரிராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில், மாரிராஜ் ஒரு தலை காதலால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மாரிராஜ் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.


மேலும் அந்த பெண் மாரிராஜின் காதலை ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஒரு தலைபட்சமாகவே மாரிராஜ் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில்  தான் அந்த பெண் மாரி ராஜின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் மனவேதனையில் இருந்துள்ளார். தொடர்ந்து உயிரோடு இருக்கக்கூடாது என முடிவெடுத்த மாரிராஜ் நேற்றிரவு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என விஷமருந்தி உள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஒரு தலைக்காதலால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண