நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் பரிசுத்த ஆவி தெரு மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட பகுதியாகும், இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது மாடியில் வசித்து வருபவர் சண்முக சுந்தரி. இவரது குழந்தைகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால்  இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினமும் காலையில் 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டு பின்னர் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவார். இந்த சூழலில் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று உள்ளார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  கோயில் இடத்தை மீட்க வந்த அதிகாரிகளுடன் சமரசம் பேசிய திமுக எம்.பி - வீட்டை இடித்து தள்ளி பதாகை வைத்த அதிகாரிகள்



பிற்பகலில் கீழ் பகுதியில் வசிப்பவர்கள் மாடிக்கு சென்று உள்ளனர், அப்போது சண்முக சுந்தரியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சண்முகசுந்தரியை தொடர்பு கொண்டு தகவல் அளித்து உள்ளனர். தகவலறிந்த  அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த  பீரோவும் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. மேலும் பீரோவில் வைத்திருந்த  20 சவரன் தங்கநகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருப்பது தெரிய வந்து உள்ளது.  


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மொழிக்கொள்கை விவகாரத்தில் ஆளுநர் புரியாமல் பேசுகிறார் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி



கொரோனா நோயாளிகளின் விவரங்களை தனியார் மருத்துவமனைக்கு விற்பதாக அரசு ஊழியர்கள் மீது புகார்


உடனடியாக இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் இந்த கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஒரு இடத்தை கூட பாஜக கேட்காததால் நாகை நகராட்சியில் எல்லா வார்டுகளிலும் அதிமுக மட்டுமே போட்டி - ஓ.எஸ்.மணியன்