இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென்காசி மாவட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நெல்லை சிந்துபூந்துறை கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், கட்சியின் செயல்பாடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது,  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும் பொழுது, 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்டி உள்ளது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாதது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலை போல அரசியல் முக்கியத்துவத்துடன் இந்த தேர்தலிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்,  இந்த தேர்தலில் வகுப்புவாதம் சார்ந்த கட்சிகள் வெற்றி பெறக்கூடாது. வகுப்புவாத சக்திகளோடு சேரும் யாராக இருந்தாலும் அவர்களும் வெற்றி பெறக் கூடாது. 


பாரதிய ஜனதா கட்சி குறுக்குவழியில் தமிழகத்தில் கால் பதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜகவின் இந்த பகீரத முயற்சிக்கு  தமிழகத்தின் ஆண்ட கட்சியான அதிமுக பலியாகியுள்ளது. அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு பாஜக அவர்கள் தோள் மீது ஏறி சவாரி செய்வதன் மூலம் தங்களது கட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், தான் இந்த தேர்தலில் வெற்றிபெற முனைப்பும் காட்டி வருகிறது.  அதிமுகவுடன் பாஜக உறவுகொண்டு இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காட்டும் முனைப்பை இந்திய கம்னியூஸ்ட் கட்சி மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறது.


அந்த அடிப்படையில் இந்த தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவும்,  மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணவும் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக நின்று வெற்றி பெற வேண்டும், இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும், தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,   திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது, மதச்சார்பின்மை கொள்கையில் திமுக மிக உறுதியாக உள்ளது,




மத்திய அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து திமுக போராடி வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் மசோதாவை திமுக தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது, மாநில உரிமைகளை பாதுகாக்கவும், மக்களுக்கு நல்லது செய்யும் வகையிலும் திமுக அரசு பாடுபட்டு வருகிறது. இதனை மக்கள் அறிவார்கள் எனவே  திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைத் இந்த தேர்தலில் பெறும்.  மத்திய அரசு,  மாநில அரசின் அனைத்து உரிமைகளை பறித்து அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசுகே என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது அப்பட்டமான ஜனநாயக  விரோதமான செயல்.


நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல், மோடி தலைமையிலான அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வது ஏற்புடையது அல்ல, எதிர்காலத்தில் ரயில்வே துறை முழுவதும்  தனியாருக்கு செல்லும்  அபாயம் தற்போது எழுந்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மக்களுக்கான நலன்களை பார்ப்பதைக் காட்டிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய நினைப்பது கண்டனத்துக்குரியது. நாட்டின் மதச்சார்பின்மை கொள்கை , இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவை மத்திய அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.




திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மைனாரிட்டி பார்ட்னர் இல்லை, திமுக தலைவர் உடன் கூட்டணியில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுமுகமான நிலை எட்டப்படும். அதிமுக ஊழல் குறித்து பேசுவதற்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடந்த குறைபாடுகளை ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்களுக்கு பிரச்சினைகளை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று மக்களுக்கான பிரச்சினை குறித்து போராடி அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும்,  தேர்தலில் நின்றால் தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை குறை சொல்லி வருகிறார்கள், மதம் சார்ந்த பிரச்சினைகளை தவிர வேறு எதையும் வைத்து  அரசியல் செய்வதற்கு வழி இல்லை அதனால் மதம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என தெரிவித்தார்.