தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 1 ஆம் தேதி 11 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  தொடர்ந்து மீன்பிடித்துவிட்டு நேற்று முன் தினம் ஊருக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள இடிந்தகரை அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பாறையின் மீது விசைப்படகு மோதி படகின் அடிப்பகுதி சேதமடைந்தது. இதனால் விசைப்படகின் என்ஜின் அறைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் படகை இயக்க முடியாமல் படகிற்குள் தண்ணீர் புகுந்து சேதமடையும் நிலை ஏற்பட்டது.




அதில் இருந்த 11 மீனவர்களும் கரை திரும்ப முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து தகவலறிந்த இடிந்தகரை மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று அங்கிருந்த மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்ட அவர்கள் படகில் இருந்த மீன்களையும் பத்திரமாக மீட்டனர், மீட்கப்பட்ட மீன்களின் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சேதமடைந்த படகினையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் படகு பாறையின் இடுக்கில் சிக்கி கொண்டதால் அதனை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததோடு படகு உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் படகில் இருந்த பொருட்கள் மற்றும் என்ஜின் ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டு கரை திரும்பினர். சேதமடைந்த படகின் மதிப்பு 5 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண