பிரதமர் நரேந்திர மோடி நெல்லையில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற தேர்தல் பொதுக் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி பூமி பூஜை நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி மேடை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், நடைபயணத்தின் நிறைவு விழா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் அகில இந்திய அளவில் பல்லடத்தில் மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்ய இருக்கிறார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவிலும், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் விழாவிலும் கலந்து கொண்டு விட்டு அன்றைய தினமே நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு மிகப்பெரிய பரப்புரை நிகழ்த்த இருக்கிறார். அதற்கான அடிக்கல் நாட்டு இன்று நடைபெற்றது. அதன்படி 28 ஆம் தேதி விழாவானது சிறப்பாக நடைபெறும் என தெரிவித்தார். கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கலந்து கொள்கின்றனர். யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுள்ளது. 15 தடவைக்கு மேல் தமிழகத்திற்கு பிரதமர் வந்துள்ளார். திருநெல்வேலிக்கு முதல் முறையாக பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மன மாற்றம் மனதில் ஏற்பட்டுள்ளது. தாமரைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. அதை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும். தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் பரப்பரை முடிந்து மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜகவிற்கு மக்கள் தருவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.