ஆன்லைன் மூலம் நடைபெறும் போலி வேலை வாய்ப்பு முகாம்களை முடக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு மூலம் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மத்திய அரசால் காலதாமதம் ஆகும் அயலக வாழ் மக்கள் பிரச்சனைகளை
அயலகவாழ் தமிழர்கள் மூலம் ஒருங்கிணைத்து முதல்வர் சரி செய்து வருகிறார் எனவும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வந்த தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள கடத்தல் என்பது ஒரு சரித்திரம் அந்த சரித்திரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய பங்கு வைப்பார் பொறுப்பில் இருந்து கொண்டு கையாலாகாத அமைச்சராக செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து குறித்து கேட்டபோது , ஏற்கனவே நாங்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டோம். பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோதும் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆறு துறைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து தான் அவர் கூறியுள்ளார். இது குறித்து நேரடியாக விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினர்.
குமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் தக்கபட்ட விவகாரம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு ?
சாலை பணிகள் நடக்கும் இடத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு கட்சியும் இரண்டு கொடியை வைத்துக்கொண்டு இது தரமற்ற சாலை என்று சொன்னால் அதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாது. சாலை போட்ட பின்பு கருத்தை சொல்ல வேண்டும் தரம் இல்லை என்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. யார் சட்டத்தை கையில் எடுத்தாலும் வன்முறைகள் ஈடுபட்டாலும் அதற்கு துணை போக முடியாது , தரமற்ற வேலை என்ற பேச்சுக்கு நாங்கள் இடமே கொடுக்க மாட்டோம் சமரசம் செய்ய மாட்டோம் போய் பிரச்சாரம் செய்யக்கூடாது என கூறினார்.
மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 300 இளைஞர்களை மீட்க அரசு போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் ஆன்லைன் மூலம் நடைபெறும் போலி வேலை வாய்ப்பு முகாம்களை முடக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு மூலம் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசால் காலதாமதம் ஆகும் அயலக வாழ் மக்கள் பிரச்சனைகளை
அயலகவாழ் தமிழர்கள் மூலம் ஒருங்கிணைத்து முதல்வர் சரி செய்து வருகிறார் என கூறினார்.