மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

மாஞ்சோலை படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சியினர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Continues below advertisement

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேல், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர்.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஊதிய உயர்வு தொடர்பாக மனு கொடுப்பதாகத் திட்டம். ஆனால், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது பேரணியாக சென்ற மக்களின் பிரதிநிதிகளை உள்ளே விட மறுத்தது காவல்துறை. இதன் விளைவாக, வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் காவல்துறை தடியடி நடத்தத் தொடங்கியது.

போலீசாரின் தடியடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தப்பக்கம் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர். அந்தப்பக்கம் தாமிரபரணி ஆறு.இந்த அடிக்கு பயந்து தப்பிக்க முயற்சித்த பலருக்கும் ஒரே வழியாக இருந்தது தாமிரபரணி ஆறுதான். வேறு வழியில்லை. எப்படியேனும், ஆற்றை கடந்துவிட்டால், தடியடியிலிருந்து தப்பி உயிர்பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் பேரணி கும்பல். கூட்டமாக ஆற்றில் விழுந்து அந்தப்பக்கம் செல்ல முயற்சித்த அப்பாவிகளில் 17 பேர் அன்று ஆற்றில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 22வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த 23 அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன. இவர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

எந்த அமைப்பினரும் ஊர்வலம், பேரணியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்பிற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சிலர் மட்டுமே ஆற்றுப் பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து அஞ்சலி செலுத்த வரும் நபர்களின் அமைப்பு , பெயர் விபரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு சிலர்  மட்டும் ஆற்றிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து இந்து மக்கள் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் , காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் என தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . இதனையொட்டி ஆற்று பகுதியில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

மேலும் ஆற்று பகுதியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழ்ந்துவிடாத வண்ணம் தீயணைப்புத்துறையின் சார்பில் பைபர் படகுடன் ஆற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் 

Continues below advertisement
Sponsored Links by Taboola