நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 114 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 373 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுத்தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று மட்டும் 144 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
13 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 32 பேர் நேற்று மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து 85 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 262 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 689 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 30 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 55 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 200 பேர் தாக்கல் செய்து உள்ளனர். 14 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்றுடன் 72 பேருடன் சேர்த்து இதுவரை 122 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சேரன்மாதேவி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 99 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 76 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 218 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 12 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 11 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 51 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 5 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 22 பேருடன் சேர்த்து இதுவரை 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
களக்காடு பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 141 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 129 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 327 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 17 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 94 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 9 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 39 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 2 பேர் உள்பட இதுவரை 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 132 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 102 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 316 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 17-க்கு 17 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 9-க்கு 72 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 5 பேருடன் சேர்த்து 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 240 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 208 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 696 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 27-க்கு 42 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது வரை 148 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 18-க்கு நேற்று 66 பேரை சேர்த்து இதுவரை 105 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வள்ளியூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 180 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 523 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 18-க்கு நேற்று 25 பேருடன் சேர்த்து இதுவரை 109 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 17 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 56 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 109 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 9 பேர் மனு தாக்கல் செய்தனர்.
மானூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 348 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 316 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 1,005 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 43&க்கு 101 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து 315 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
25 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு நேற்று 139 பேருடன் சேர்த்து 208 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 240 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 139 பேருடன் சேர்த்து 588 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 27-க்கு 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 156 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 16-க்கு 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 103 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,244 பேரும், 1,731 வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,713 பேரும், 122 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 836 பேரும், 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 78 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மொத்தம் உள்ள 2,069 பதவிக்கு 6,871 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.