தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று சுற்றுப்பகுதிகளில் ஒன்றான  ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 9 வைணவ திருத்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது திருத்தலங்களும் நவ திருப்பதி என அழைக்கப்படுகிறது. நவதிருப்பதி கோயில்கள் நவகிரக பரிகார தலமாகவும் விளங்குகிறது.

                                   

 

1.திருவைகுண்டம் - சூரியன் தோஷ நிவர்த்தி ஸ்தலம்

 

நவ திருப்பதிகளில் முதல் தலம் திருவைகுண்டம் ஆகும். இங்கு ஸ்ரீவைகுண்டநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். மூல விக்ரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன் கமண்டலத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து வழிபட்டதாக தலப்புராணம் கூறுகிறது. தாயார் வைகுண்டவல்லி, சொரநாத நாயகி ஆவார்.

                             

 

2. திருவரகுணமங்கை-சந்திர பரிகர தலம் 

 

நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இத்தலம் சந்திர பரிகார தலமாக விளங்குகிறது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள், இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.
  


                           

 

3.திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் - செவ்வாய் பரிகார தலம் 

 

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் (தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் காட்சியளிக்கிறார். சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.

                             

 

4.திருப்புளியங்குடி-புதன் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்: 

 

நத்தத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மூலவர் காசின வேந்தன், தாயார் மலர்மகள் நாச்சியார், புளியங்குடி வல்லி. திருமால் இலக்குமி தேவியுடன் நதிக்கரையில் தனித்திருந்தபோது, தன்னை திருமால் கண்டு கொள்ளவில்லை என பூமாதேவி கோபம் கொண்டு பாதாள லோகம் செல்ல, திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இருவரும் சமமே என இரு தேவியருடனும் இங்கு எழுந்தருளி காட்சியளிக்கிறார். பூமாதேவியை சமாதானம் செய்து பூமியைக் காத்ததால், பூமிபாலன் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது.


                               

 

5.ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் - வியாழன் குரு பரிகார தலம்

 

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். புளிய மரத்தின் சிறப்பு: நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.


                                 

 

6.தென் திருப்பேரை - சுக்ர பரிகார ஸ்தலம் 

 

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறான். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

                                   

 

7.பெருங்குளம் பெருமாள்: சனீஸ்வர பரிகாராஸ் ஸ்தலம்: 

 

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் மாயக் கூத்தன் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவருக்கு சோர நாதன், சீனிவாசன் என்ற பெயர்களும் உள்ளன. இறைவி குளந்தை வல்லித் தாயார் என்றும் கமலாதேவி என்றும் அறியப்படுகிறார். இவருடன் அலமேலு மங்கைத் தாயாரும் உள்ளார். இக்கோவிலின் தீர்த்தம் பெருங்குளம் என்றும் அறியப்படுகிறது. இக்கோவிலின் விமானம் ஆனந்த நிலைய விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது. ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இத்தலம் குறித்து பாடியுள்ளார். அதனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக புகழப்படுகிறது.

                               

 

7.தொலைவிலிமங்கலம் (இரட்டைத் திருப்பதி)-ராகு பரிகார தலம்

 

இரண்டு கோயில்கள் அருகருகே உள்ளன. இவை இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகின்றன. தெற்கு கோயிலில் மூலவர் தேவபிரான், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். ஆத்ரேயசுப்ரபர் தேவபிரானுக்கு தினமும் வடக்குத் தடாகத்திலிருந்து தாமரை மலர்களை கொய்து பூஜித்து வந்தார். ஒரு நாள் சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களைக் கொய்து வருகிறார் என்பதை அறிய பின்தொடந்து சென்றார் மாலன். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடந்து வருவதற்கான காரணத்தைக் கேட்க, தேவபிரானோடு சேர்த்துத் தனக்கு அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால் அங்கேயே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக அருள்பாலிக்கிறார். இது ராகு கிரக தோஷ நிவர்த்தி தலம்.


                                   

 

8.திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் -  ராகு பரிகார தலம்

 

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது. பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.

 

9.திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்-கேது பரிகார தலம்

 

தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரபர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரபர் எங்கிருந்து கொணர்கிறார் என்று அறிய பெருமாள், சுப்ரபர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரபர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள். இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில், கேது அம்ச திருக்கோயில்