கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் - வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 250 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள், 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக தேர்தல் நடத்தை விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், குளச்சல், குழித் துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சிகளில் உள்ள 99 வார்டுகளுக்கும் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கும் என மொத்தம் 975 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 4366 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் 4700 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோயில் இடத்தை பட்டா மாற்றம் செய்த விஏஓ மீது வழக்கு பதிவு
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 233 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 34 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை ஆகும்.நகராட்சிகளில் உள்ள 99 வார்டுகளில் 140 வாக்குச்சாவடிகளும், 51 பேரூராட்சிக்குட்பட்ட 828 கவுன்சிலர் பதவிக்கு 951 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | கடைசி நாள் பரப்புரையிலும் காணாமல் போன தேமுதிக - திருவண்ணமலையில் 273 பதவிகளில் 18 இடங்களில் மட்டுமே போட்டி
இதில் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 250 கேமராக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டதும் பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election 2022 | எம்.பி. பதவியை விட கவுன்சிலர் பதவிதான் முக்கியம் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்