சிதம்பரம் நடராஜர் கோயிலில் அந்த பெண்ணுக்கு ஜாதி ரீதியாக அனுமதிக்க மறுத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

குமரி மாவட்டம் குழித்துறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தரும். தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை இதுவரைக்கும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது இனிமேல் எப்படி போகிறது என்பதை பார்ப்போம். ஜிஹாப் விவகாரம்.. மாணவர்கள் சீருடை அந்தந்த பள்ளியின்  முடிவு அரசினுடைய முடிவு அல்ல. இதை அரசியலாக பார்ப்பது சரி அல்ல. பள்ளி சீருடை முதலில் கொண்டுவந்தது காமராஜர் ஆட்சி காலத்தில்.

 



 

 

நல்ல நோக்கத்துடன் கொண்டு வந்த விஷயம் இதில் அரசியல் பார்க்க வேண்டிய தேவை இல்லை. அந்தந்த பள்ளி நிர்வாகத்தின்  முடிவு. சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை விவகாரம் அதன் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த விஷயங்கள் பார்க்கும்போது தடுக்கப்பட்டது முறையற்ற செயல். ஆனால் கொரோணா காரணத்தினால் மேலே அனுமதிக்கப் படவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 



 

அந்தப் பெண் ஜாதி ரீதியாக உள்ள விஷயத்தை  சொல்கிறது அப்படி நடந்திருந்தால் ஒரு காலமும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எல்லா பக்தர்களுக்கும் பாகுபாடின்றி தரிசன உரிமை கொடுக்க வேண்டும் இதுதான் பாஜகவின் நிலைப்பாடு.நடராஜர் கோயில் தீட்சதர்கள் இடையே உள்ள பிரச்சனையில் நான் தலையிட முடியாது, எதிர்க்கட்சி முதல்வர்களை ஓரணியில் திரட்டும் முதல்வர் ஸ்டாலின் முயற்சி நோக்கம் எதற்காக என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக என்பது கள்ளநோட்டு போன்றது என அமைச்சர்மனோ தங்கராஜ் கருத்துக்கு பதில் கூறுகையில் கள்ள நோட்டு என்பது அதை கையாள கூடியவர்களுக்கு தான் அதைப் பற்றிய நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். யார் அதை சொன்னார்களோ அவர்களுக்குத்தான் அது பொருந்தும். கள்ள நோட்டை பற்றிய விஷயங்கள் தெரிந்த அவர்களுக்கு பிஜேபி பற்றிய முழுமையான விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது” எனவும் அவர் கூறினார்.