தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசையில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. இங்கு பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற கோரியும் நிறைவேறிய வேண்டுதல்களுக்கு நேர்த்திக்கடனாக கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், அஷ்டகாளி முதல் போலீஸ் வேடம், பிச்சைக்காரர் வேடம், ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கிராமம் கிராமமாக சென்று யாசகம் பெற்று காணிக்கை செலுத்துவது வழக்கம். வேடம் அணியும் பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து  குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கமாக பக்தர்களால் பின்பற்றபட்டு வருகிறது. 


                               

 

தசரா நிகழ்ச்சியின் முக்கிய நாளான மகிஷாசூர சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தன்று லட்சக்கணக்கானோர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சூரசம்ஹாரம் நிறைவடைந்து சப்பர பவனியை தொடர்ந்து கடலில் புனித நீராடி தங்களது வேடங்களை கலைவர். கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தசரா தினங்களில் கோயிலுக்கு வரவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து சூரம்சம்ஹாரம் மற்றும் சப்பரப்பவனி பக்தர்களின்றி கோவில் பிரகாரத்திலேயே நடைபெற்றது.  இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மூன்றாம் அலையின் காரணமாக கோவில்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இந்நிலையில் கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தசரா தினங்களில் கோவிலுக்கு வரவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து சூரம்சம்ஹாரம் பக்தர்களின்றி நடைபெற்றது. 

                               

 

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மூன்றாம் அலையின் காரணமாக கோவில்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை துவங்கி உள்ளனர்.


                               
                             

 

கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தசரா திருவிழா நடைபெறுமோ என ஏங்கும் பக்தர்கள் மட்டுமல்லாது திருவிழா காலங்களில் வேட பொருட்கள் செய்பவர்கள், இசை கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள் இந்தாண்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் தங்களது கோரிக்கை மனுவினை அளித்து வருகின்றனர்.                         
                               

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழா நடைபெறாததால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி நாடக கலைஞர்கள் தங்களது கோரிக்கை மனுவினை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். இதில் ரஜினி வேடம், மாற்றுத்திறனாளி சூர்யா வேடம், கோமாளி வேடம் உள்ளிட்டவைகள் அணிந்து வந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குட்டிக்கரனம் அடித்து வாழ்வாதாரம் வழங்க வலியுறுத்தினர்.