தமிழகத்தில் பல்வேறு அரசுப்பேருந்துகள் முறையான பராமரிப்பின்றியும், ஓட்டை உடைசலுமாக இயங்கி வருவதாக பொதுமக்கள், பயணிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் குற்றம் வைத்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் காட்சிகளும், அதில் பயணிகள் குடை பிடித்து செல்வதும் இன்னும் வாடிக்கையாக நடந்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து, திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் திருநெல்வேலி - நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து முறையான பராமரிப்பின்றி இயங்குவதோடு இரண்டு நாட்களாக சரிவர பிரேக் பிடிக்கவில்லை என்றும் ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ்  என்பவர் புகார் தெரிவித்துள்ளார். 




 


இதுகுறித்து அவர் கூறும் பொழுது, கடந்த 10 நாட்களாக இப்பேருந்தில் "ப்ரேக்" சரியில்லாமல் இருப்பதாகவும், வலது பக்கம் திருப்பும் போது இடது பக்கமாகவும், இடது பக்கம் திருப்பினால்  வலது பக்கமாக வண்டி செல்வதாகவும்  கூறினார்.  மேலும் பேருந்தை 40 கிலோ மீட்டரில் கூட பிரேக் நிக்கவில்லை, இதில் நான் 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கினால் சுத்தமாக "ப்ரேக்" பிடிக்காது. இப்படி இயக்கினால் எனது நிலை என்ன? இது விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகளிடம் கூறினால், அவர்கள் என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சரிசெய்து தர மறுக்கின்றனர் எனவும் கூறி  அரசு பேருந்தை நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,


இந்நிலையில் அரசு பேருந்தை இயக்கிப்பார்த்த ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் அதில் பழுது இல்லை என தரச்சான்று அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட ஓட்டுனர் ஞானபெர்க்மான்ஸ்  தவறான தகவலை கூறி பேருந்தை ஒப்படைத்தாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண