கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி திரிந்த ஒரு தெருநாய் அங்குள்ள பிரதாப் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பின்னர் வெளியே செல்ல வழியை தேடியபோது வீட்டின் சுற்றுச்சுவரில் துளை இருப்பதை கண்டது. உடனே அந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து தலையை நுழைத்துள்ளது. ஆனால் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அதாவது நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது. இதனால் முன்னோக்கி செல்ல முடியாமலும், தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் நாய் பரிதவித்தது. ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்தது. நேற்று காலையில் பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சுவரின் துளையை சற்று பெரிதாக உடைத்து நாயை மீட்டனர். சுவரில் இருந்து விடுதலையான மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்து சந்தோசத்துடன் ஓடியது.

 

 



 


 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் இரண்டாவது நாளாக பால்வடிக்கும் தொழில் பாதிப்பு. நாளொன்றுக்கு 50லட்சரூபாய் வர்த்தகம் முடக்கம்.

 



 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய விவசாயமான ரப்பர் விவசாயம் சுமார் 25000ஹெக்டர் பரப்பளவில் நடைபெற்றுவருகிறது இதில் அரசு ரப்பர்கழகம் மூலம் சுமார் 5ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது இதன் மூலம் நாளொன்றுக்கு 250டன் ரப்பர் உற்பத்திநடைபெற்றுவருகிறது, இந்நிலையில் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு குற்றியாறு பகுதிகளிலும் குலசேகரம் ,கடையாலுமூடு ஆறுகாணி ஆலஞ்சோலை களியல் அருமனை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் இரண்டாவது நாளாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கபட்டுள்ளது இதனால் நாளொன்றுக்கு சுமார் 50லட்சரூபாய்கான வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது இதேபோல் மாவட்டதில் சுமார் 50000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால்வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் கனமழையால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை பெய்த நிலையில் அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் : 

 

பேச்சிப்பாறை - 44.76 அடி

(கொள்ளளவு 48 அடி)

நீர் வரத்து - 1464 கன அடி/ sec.

நீர் திறப்பு - 582

 

பெருஞ்சாணி - 66.80 அடி 

(கொள்ளளவு 77 அடி)

நீர் வரத்து - 688 கன அடி

வெளியேற்றம் - 350 கன அடி   

 

மாம்பழத்துறையாறு - 34.61 அடி 

(கொள்ளளவு 54.12 அடி)

நீர் வரத்து - 1 கன அடி 

வெளியேற்றம் - இல்லை

 

பொய்கை அணை - 16.30 அடி 

(கொள்ளளவு 42.65 )

நீர் வரத்து - இல்லை 

வெளியேற்றம் - இல்லை 

 

சிற்றார் - 1 - 8.76 அடி 

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - 147 கன அடி  

வெளியேற்றம் - 100 கன அடி 

 

சிற்றார் - 2 - 8.86 கன அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - 74 கன அடி 

வெளியேற்றம் - இல்லை